குடுகுடுப்பை: ஜக்கம்மா சொல்றா! வணக்கம்! வணக்கம்! வணக்கம்!
அது சரி: ம்கும். இதக்கூட சொந்தமா சொன்னா செலவாயிரும்.
குடுகுடுப்பை: கட்சித்தலைவர் வரும்போது எழுந்து நிற்காமல், வணக்கமும் சொல்லாமல் இருப்பதுதான் பண்பாடா?
அது சரி: இல்லவே இல்லை. இனி நீங்க படப்போறதுதான் பெரும்பாடு.
முகிலன்: இலக்கிய அணித்தலைவர் நாந்தான் ரைமிங்கோட பேசலாம் என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
குடுகுடுப்பை: எல்லாரும் வந்தாச்சா? அங்க யாரு சேர்ல தலைல கை வெச்சிக்கிட்டு தூங்கறது?
வானம்பாடி: நான் தூங்கல தூங்கல. முடி பறக்குதுன்னு எழுதி தொங்கவிட்டுக்கிட்டு தானே உக்காந்திருக்கேன்.
குடுகுடுப்பை: நசரேயன் எங்கே?
வானம்பாடி: அதோ ஜன்னல் கிட்ட நின்னு கட்சிப் பணியாற்றுகிறாராம்.
குடுகுடுப்பை: இங்க வாரும்யா நசரேயன். அங்க என்ன பண்றீரு.
நசரேயன்: ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.
குடுகுடுப்பை: ஆரம்பிக்கலாமா?
(வாட் ட ஹெல்! நாமன்னா இளிச்ச வாயா சந்தனமுல்லை. விடுறதில்லை. லகலகலக)
குடுகுடுப்பை: அங்க என்ன சத்தம்? யாரங்க?
கலகலப்ரியா: ஹூஊஊஊஊஊஊம். ஜக்கம்மா! பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத கட்சி எப்படி நடக்கும்னு பார்க்கலாம். நாங்க இல்லாம எதிர் கவுஜ எப்படி எழுதுவீங்கன்னு பார்க்கலாம்? என்ன நடக்குது இங்க?
அது சரி: :O))))
குடுகுடுப்பை: அட இருப்பா. எப்ப பாரு பீப்பீ ஊதிக்கிட்டு. இவங்க சொல்றதும் சரிதான். சமாளிப்போம். வாங்க வாங்க. ஹி ஹி. அதான் அஜண்டால போட்டிருக்கே, இதர பதவிகளுக்கு நியமனம்னு. இமெயில் அனுப்பறதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. வாங்க வாங்க.
கலகலா: அத்த்த்த்த்து!
(நாட்டாமாஆஆஆஆஆஆ! தீர்ப்ப மாத்திச் சொல்லுங்)
குடுகுடுப்பை: என்ன எழவுடா. இப்பதான் ஒரு சவுண்டுக்கு சரண்டர் ஆனோம் இப்ப யாரு? அட பழமை! வாங்க வாங்க!
பழமை: வரதெல்லாம் இருக்கட்டுங்ணா! இந்தக் குழந்த என்னமோ கேக்குது பாருங்! ஒரு வேல பார்க்க முடியலிங். ஒரே அழுவாச்சி!
அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எனக்கு சிறுவர் அணி தலைவர் பதவி வேணூஊஊஊம்.
குடுகுடுப்பை: குடுத்தாச்சி குடுத்தாச்சி. தோ! அந்த ஓரம் சொப்பு சாமான்லாம் இருக்கு பாரு குழந்தை. அங்க போய் சமர்த்தா விளையாடிக்க கண்ணு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..
கலகலா: தலைவரா இருந்தாலும் ஸ்ஸ்ஸ்ஸப்பால்லாம் என்கிட்ட திருடப்படாது. அது நாந்தான் சொல்லுவேன்.
குடுகுடுப்பை: சைலேன்ஸ்! கூட்டம் ஆரம்பிக்கப் போறேன்!
அது சரி: அல்லோ! நீங்க யாரு கூட்டம் ஆரம்பிக்க? கட்சில இருந்தே தூக்கியாச்சிங்கறேன். அப்புறம் கூட்டம் ஆரம்பிக்கறாராம்ல.
குடுகுடுப்பை: (அது சரின்னு பேர வெச்சிகிட்டு எது பண்ணாலும் தப்புன்னே சொல்லிக்கிட்டிருக்காரே. கேப்பாரே இல்லையா ஜக்கம்மாஆஆஆ)
கலகலா: கூப்டிங்களா குடுகுடுப்பை.
குடுகுடுப்பை: இந்தாள சமாளிக்கவே கோழி செரிச்சி போச்சி. நீங்க வேறயாம்மா. உக்காருங்க.
பழமை: அது சரிங்கண்ணே. அந்த வருங்கால முதல்வர் யாருன்னு கேட்டேனே.
அது சரி: என் கேள்விக்கு பதில் சொல்லாம வேற எந்த தீர்மானமும் செல்லாது! சொல்லிட்டேன்.
குடுகுடுப்பை:ஓஒ. சரி சரி. இப்பத்தாம்வே புரியுது. உம்ம பதிவில எமினெம் படத்த தூக்கிட்டு டாலர் படம் போட்டதுக்கு அர்த்தம். நிதித்துறைத் தலைவரும் நீர்தான்யா. போதுமா? (இனிமே கருப்புப் பணம் கூட கோழி, காடைன்னு வாங்கித்தான் தேத்தணும்)
அது சரி:மிஸ்டர் குடுகுடுப்பை! யூ ஆர் ஸ்மார்ட். பட் வேதாளம் என்ன கேக்குதுன்னா அந்த நிதில நாய் பத்திர ஊழல் பணமும் செண்ட் சுத்தமா கணக்கில வந்திருக்கான்னு. இதுக்கு பதில் தெரிஞ்சும் சொல்லலைன்னா….)
குடுகுடுப்பை: சிக்கன் புளிசாதம் வாங்காம மிச்சம் பண்ண காசு கூட அதிலதான் இருக்கு போதுமா?
அது சரி: தி.கு.ஜ.மு.க தலைவர் வாழ்க (இப்போதைக்கு)
பழமை: அந்த வருங்கால முதல்வர் பதவி..
குடுகுடுப்பை: பழமை! தெரியாம கேக்கறேன். எம்.ஜி.ஆர். கலர்ல இருக்கீரு. தொப்பியும் போட்டிருக்கீரு. அதுக்காக அடுத்த முதல்வரா உங்களை ஆக்கிட்டு கட்சித்தலைவர்னு நான் எதுக்கு? முதல்ல கட்சிய பலப்படுத்தணும். முதல்வர்னா திரைப்படத்துறையில சம்பந்தமிருக்கணும். இல்லைன்னா போணியாகாது. அதுக்கு வழிய பார்ப்பம் வாங்க. ஒரு படம் எடுப்போம்.
அதுசரி: அதான பார்த்தேன். நிதித்துறையை குடுத்துட்டு சினிமா எடுக்கறா மாதிரி எடுத்து இருக்கற பணத்தை சூறை விட்டுட்டு வட போச்சேன்னு நான் இருக்கணும்னு ப்ளானா? சன் பிக்சர்ஸ் ரிலீஸா?
குடுகுடுப்பை: அதெல்லாம் இல்லப்பா. எல்லாத் துறையிலயும் பதிவர் இருக்கோம்ல. பதிவர் பிக்சர்ஸ்னு ஆரம்பிச்சி அவங்கவங்க பங்களிப்புன்னு ஒரு இடுகை போட்டு அத்தனை பதிவரும் தன்பதிவில் ஒரு இடுகை போட்டா…
நசரேயன்: அருமை அருமைன்னு பின்னூட்டம்தான் வரும். ஓட்டு கூட வராது..
முகிலன்: அதும் ஒரு சிலர் ஓட்டு மட்டும் இன்னைக்கு.. அப்பால படிக்கறேன்னு பின்னூட்டம் போடுவாங்க.
கலகலா: யோவ்! இனிமே பொழிப்புரைன்னு பேச்சு வரட்டும்..அப்புறம் இருக்கு சேதி..
முகிலன்: ஓ. அது ஒன்னு இருக்கோ. என் அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
குடுகுடுப்பை: இருங்கப்பா. எல்லாத் துறையிலயும் நாம இருக்கிறதால டைரக்ஷன் ஒருத்தரு, பாட்டு ஒருத்தரு, மீஜிக் ஒருத்தரு, திரைக்கதை, நடிப்புன்னு நாமளே எடுத்தா
அது சரி: நாமளே பார்த்து மகா கழிசடைன்னு இடுகை போடலாம்:O)))
பழமை: இதும் நல்ல ஆலோசனையாத்தானுங்க தெரியுது. பண்ணலாமுங்க.
குடுகுடுப்பை:சரி முதல்ல ஹீரோ!
நசரேயன்: கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு என்ன யோசனைன்னேன். அதான் நான் இருக்கம்லா?
(அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)
நசரேயன்: (கடுப்பாகி) நான் இந்த ஆட்டைக்கு வரலை. ஏன் எல்லாரும் இப்படி சிரிக்கணும்?
முகிலன்:ஹிஹ்ஹீஈஈஈ. முடியல..கருப்பு கருப்புன்னு சொல்லிகிட்டு வெண்ணைன்னு சொல்றத கேட்டு சிரிக்கிறதா இல்ல தன்னையே வெண்ணெய்னு சொல்லிக்கிறீங்கன்னு சிரிக்கிறதா.
பழமை: சே! பாவம்யா. நாமளே ஒரு சக பதிவருக்கு உதவலைன்னா எப்படி. நசரேயந்தான் ஹீரோ.
நசரேயன்: (நா தழுதழுக்க) நல்லாருங்க அண்ணாச்சி..அவ்வ்வ்வ்வ்வ்…
குடுகுடுப்பை:(குணசித்திர நடிகராம். என்னமா சீன் போடுராரு பாரு) சரி சரி. அப்புறம் மேக்கொண்டு..
நசரேயன்: அல்லோ. நாந்தான் ஹீரோ! கண்டிசன கேட்டுக்கிடுங்க. ஈரோயினி ஒரு வடக்கச்சியாதான் இருக்கணும். அதே லால்பாக்ல நான் குடுக்கிற ரோஜாப்பூவ தலையில வெச்சிகிட்டு மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடணும். வடக்கச்சி சம்பளம் வேணும்னாலும் நான் ஒரு விட்ஜெட் எழுதி சம்பாதிச்சி தாரன்.
குடுகுடுப்பை:திரைக்கதை?
முகிலன்: இப்ப லஞ்ச் டைம் வந்துட்டுது. தலைவரே! சாப்பாட்டுக்கு என்ன அரேஞ்மெண்ட்?
குடுகுடுப்பை: இப்புடி வேற ஆட்டைய போடுவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் நேத்து ரைஸ், மீன் கொழம்பு கொண்டுவந்துட்டேன். அவங்கவுங்க பார்த்துக்க வேண்டியதுதான். இந்த பழமை பக்கத்துல உக்காந்ததுல இருந்து பறவை வாசனை வேற பசிய தூக்குது.
(டிஸ்கி: எல்லாரும் கலைந்து போகிறார்கள். நிஜம்மா மொத்தம் எழுதிட்டேன். நீளம் காரணமாதான் ப்ரேக். கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடுவேன்.ஹி ஹி)